சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை.! அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் -வானிலை மையம்

Published : Aug 27, 2023, 07:34 AM IST

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் இரவு முழுவதும் இடி மின்னலோடு மழை பெய்ய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
15
சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை.! அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் -வானிலை மையம்

இரவு முழுவதும் சென்னையில் மழை

தமிழகத்தில் கோடை காலத்தைப்போல் தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தால் ஏரிகளில் தண்ணீர் இல்லாத சூழல் நிலவியது. மேலும் எப்போதும் குற்றாலம் பகுதியில் நீடிக்கும் சீசன் இந்தாண்டு முழுவதுமாக பாதிக்கப்பட்டு குற்றால அருவிகள் வறண்டு காணப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை மாலை நேரத்தில் இடி மின்னலோடு மழையானது பெய்தது.  மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, வடபழனி, தி,நகரில் உள்ளிட்ட இடங்களிலும், ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் இரவு தொடங்கிய மழை அதிகாலையில் கனமழையாக பெய்தது. 

25

10 மாவடங்களில் மழை பெய்யும்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முதல் 1-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

35

சென்னையில் இடியுடன் கூடிய மழை

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியது. 

45

வானிலை நிலவரம் என்ன.?

27.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.08.2023 முதல் 01.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

55

மீனவர்களுக்கான எச்சரிக்கை

26.08.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படியுங்கள்

Vegetable Price: தக்காளியை மிஞ்சிய இஞ்சி.. விலையை கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.. காய்கறி விலையும் உயர்வு..!

Read more Photos on
click me!

Recommended Stories