புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சலின் மர்ம மரணம்.! இது தான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்

Published : Jul 14, 2025, 10:34 AM ISTUpdated : Jul 14, 2025, 10:35 AM IST

கருப்பு நிற மாடலான சான் ரேச்சல், பல விருதுகளை வென்று மாடலிங் துறையில் சாதித்தவர். தூக்க  மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
14
கருப்பழகி சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல்

வெள்ளையாக இருந்தால் தான் அழகு என கூறி வருபவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கருப்பு நிறத்தை பாசிட்டிவாக மாற்றி உலக அளவில் பட்டம் வென்றவர் சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல் (வயது 24), இவர் பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். தனியார் நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டுள்ளார்.

 தினந்தோறும் புதுப்புது போட்டோ ஷூட்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துள்ளார். புதுச்சேரியை காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தான் இந்த சான் ரேச்சல் (24) கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்,

24
அழகி போட்டி- பட்டங்களை குவித்த சான் ரேச்சல்

கருப்பு நிறம் கொண்ட இவர் மாடலிங் துறையில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் புதுச்சேரி 2020, குயின் ஆப் சென்னை- 2023, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இளம்பெண்களுக்கு மாடலிங் துறையில் சாதிப்பது தொடர்பான பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். 

இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்த சான் ரேச்சல் அங்கு அதிக அளவில் தூக்கம் மற்றும் இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் மயக்கமடைந்தவரை உடனடியாக அவரது சகோதரர் கொளதம் மற்றும் தந்தை காந்தி ஆகியோர் சான் ரேச்சலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

34
தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர் அங்கிருந்து புறப்பட்டவர் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அடுத்த நாட்களில் கை, கால்கள் வீக்கம் அடைந்து உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சான் ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்டதால் சான் ரேச்சலுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைகாக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

44
சிகிச்சை பலனின்றி சான் ரேச்சல் உயிரிழப்பு

இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு வசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனது மரணத்திற்க்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும் இதனால் கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில் தனது கணவரிடம் கூட கூறாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சான் ரேச்சல் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா.? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Read more Photos on
click me!

Recommended Stories