politician vijay
அரசியலில் களம் இறங்கிய விஜய்
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள், குறிப்பாக நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் கடைசியில் அந்த கட்சிகளோடே கூட்டணி வைக்கும் நிலை உருவானது. தமிழகத்தில் அந்த அளவிற்கு அடித்தளம் அமைத்து உள்ளது திராவிட கட்சிகள். இந்தநிலையில் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்று வருகிறார்.
அதனை உதறி தள்ளிவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர், தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் அறிவித்து திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.
விஜய் பிரம்மாண்ட அரசியல் மாநாடு
நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கை, கூட்டணி என அதிரடியாக அறிவித்தார். குறிப்பாக 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும், தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எங்களை நம்பி கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும் அரசியலில் கோபத்தோடு, ஆக்ரஷத்தோடு பேச வேண்டியதில்லையெனவும் கூறினார். மேலும் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து என தெரிவித்தார்.இதனால் விஜய்யோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டிய திட்டமிட்ட சீமானுக்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
seeman
சீமானுக்கு எதிராக விஜய்
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தம்பி, தம்பி என அன்பாக பேசிய சீமானுக்கு செக் வைத்துள்ளார் விஜய், தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் பேச்சு தொடர்பாக சீமான் கூறுகையில், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது விஜய் முடிவு, திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் தான் இருக்கிறது என விமர்சித்தார். என் பயணம் என் கால்களை நம்பித்தான். யார் காலையும் நம்பி பயணிக்காதவன் நான் என சீமான் தெரிவித்தார். எனவே வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய் கைப்பற்றக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Aadhav Arjuna
ஆதரவு தெரிவித்த விசிக
இதனிடையே விஜய்யின் பேச்சு விடுதுலை சிறுத்தைகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஆதவ் அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என கூறியுள்ளார்.
Aadhav Arjuna
தமிழகத்தில் கூட்டணி மாறுமா.?
ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகளுக்கு சூப்பர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அம்பேத்கர் தனது கட்சியில் மூத்த தலைவர் வழிகாட்டி என கூறியுள்ளார். எனவே விடுதலை சிறுத்தைகளின் மனநிலையை பொறுத்துவரை திமுகவுடன் கூட்டணி அமைத்தால் 10 இடங்களுக்கு மேல் கிடைக்காது. இதுவே விஜய் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் குறைந்தது 20 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உருவாகும் என நினைக்க தொடங்கியுள்ளனர். எனவே வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.