தீபாவளிக்கு அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு போறீங்களா.? போக்குவரத்து துறை வெளியிட்ட குட் நியூஸ்

First Published | Oct 28, 2024, 6:46 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் இந்த பேருந்து நிலையங்களை அடைய கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்படும்.

diwali

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

படித்த படிப்பிற்கு வேலை தேடியும், தங்களது குடும்பத்தை காப்பாற்றவும் நாள் தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வேலை தேடி வருகின்றனர்.அந்த வகையில் வந்தவர்களை வாழ வைக்கும் ஊராக சென்னை உள்ளது. இருக்க இருப்பிடம் கொடுத்தும், வாழ்வாதாரத்திற்கு வேலையும் வழங்கி வருகிறது. எனவே சொந்த ஊரை விட்டு வந்தவர்களுக்கு விஷேச மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் மட்டுமே கொண்டாட்டமாக இருக்கும் அந்த வகையில் தீபாவளி பண்டிகை என்றால் கேட்கவா வேண்டும்.

diwali

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

அதுவும் 4 நாட்கள் தொடர் விடுமுறை. எனவே மூட்டை முடிச்சுகளை கட்டி புறப்பட தயாராகி விட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு முடிவடைந்து விட்டது. சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிட்ட அடுத்த 10 நிமிடங்களில் அதுவும் முடிவடைந்துவிட்டது. 

இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மட்டுமே பொதுமக்கள் நம்பி உள்ளனர். அதிலும் தனியார் பேருந்துகள் கட்டணம் கிடு,கிடுவென உயர்ந்து விட்டது. இந்தநிலையில் தமிழக போக்குவரத்து துறை சார்பாக சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து இன்று முதல் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


setc bus

கூடுதல் மாநகர பேருந்துகள்

மேலும் கடந்த ஆண்டு 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 3 இடங்களில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 3 பேருந்து நிலையங்களுக்கு செல்ல பொதுமக்கள் வசதிக்காக மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக  மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

31.10.2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

setc bus

தீபாவளி பேருந்துகள் இயங்கும் பேருந்து நிலையங்கள்

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

2. கோயம்பேடு பேருந்து நிலையம்

3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

bus in chennai

300 சிறப்பு இணைப்பு பேருந்துகள்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 300 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் இயக்கபட உள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக 02.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 03.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) 100 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!