குறிப்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கடந்த ஒரு மாத காலமாகவே மாநாட்டு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு பலமுறை சென்று, ஓய்வு உறக்கமின்றி பல விஷயங்களை கவனித்தார். ஆனால் மேடையில் பல விஷயங்களைப் பேசிய தளபதி விஜய், இறுதியில் தனது தொண்டர்களை பத்திரமாக தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று எந்த விதமான கோரிக்கையும் விடுக்கவில்லை.
இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை தயார் செய்த தன்னுடைய கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட யாருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவிக்கவில்லை. இதுவே மற்ற கட்சிகள் மாநாடு நடத்தியிருந்தால், நிச்சயம் இந்த நேரத்தில் இந்த மாநாடு நடக்க உதவி அனைவருக்கும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து இருப்பார்கள். அந்த ஒரு விஷயத்தில் விஜய் ஒரு அரசியல் தலைவராக கோட்டை விட்டுவிட்டதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடு, சோறு, வேலை இந்த 3க்கும் உத்தரவாதம் கொடுக்காத அரசு இருந்தா என்ன? போனால் என்ன – தவெக தலைவர் விஜய்!