அடிதூள்.. மூன்று நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு!

Published : Mar 25, 2026, 01:36 PM IST

மகாவீரர் ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 915 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேருந்துகளுக்கு பயணிகள் www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

PREV
15
தமிழகம் முழுவதும் 915 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பவுர்ணமி, அமாவாசை, சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார  இறுதி நாட்கள் மற்றும் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் தமிழகம் முழுவதும் 915 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

25
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

அதாவது மார்ச் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) மார்ச் 28ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 29ம் தேதி (ஞாயிறுக்கிழமை) வார விடுமுறை நாட்கள் மற்றும் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், மார்ச் 28ம் தேதி (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

35
கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 27ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் மார்ச் 28ம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

45
மாதாவரத்தில் இருந்து புறப்படும் பேருந்து

மாதாவரத்திலிருந்து மார்ச் 27ம் தேதி மற்றும் மார்ச் 28ம் தேதி ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,954 பயணிகளும் சனிக்கிழமை 3,099 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,917 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

55
முன்பதிவு செய்வது எப்படி?

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories