சென்னைக்கு என்ன ஆகப்போகுது.!! செப்டம்பரில் தேதி குறித்த வல்லுநர்கள்- வெதர் மேன் கூறுவது என்ன.?

First Published | Sep 6, 2024, 5:20 PM IST

சென்னையில் மீண்டும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் கடந்த கால மழைப்பொழிவு தரவுகளின் அடிப்படையில் அவர் தனது கணிப்புகளை முன்வைக்கிறார்.

காலநிலை மாற்றம்- வெளுத்து வாங்கும் மழை

நாளுக்கு நாள் காலநிலை மாற்றம் காரணமாக தமிழகம் மட்டுமல்ல பல்வேறு நகரங்களில் கோடை காலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல நகரங்களில் தண்ணீரில் மூழ்கியது. மும்பையில் அடிக்கடி மழை பெய்து நகரங்கள் முழ்கிய செய்திகளை நாள்தோறும் கேட்டு வருவோம். அங்கு காணப்படுகிற காட்சிகளை பார்க்கும் போது இது மும்பை நகரமா அல்லது கடலா என்பது போல் காட்சியளிக்கும்.

இதே போன்ற காட்சி தான் சென்னையையும் ஒவ்வொரு ஆண்டிலும் காணப்படுகிறது. தற்போது குஜராத், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மழை கொட்டித்தீர்த்தது. வீடுகள், அலுவலகங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் வீடுகளும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
 

வயநாடு கோரதாண்டவம்

இதே போலத்தான் அண்மையில் நடைபெற்ற வயநாடு சம்பவம், எதிர்பாராத வகையில் மழை கொட்டி தீர்த்ததால் இரண்டு நகரமே மண்ணோடு மண்ணாக மூழ்கியது. 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இன்னும் 200 பேரின் நிலை தெரியாமல் உள்ளது. இதே போன்று சம்பவம் தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஒருசில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வயநாட்டில் ஏற்பட்டதைப்போல் உதகையிலும் ஏற்படும் எனவும் அதுவும் இந்தாண்டே நடைபெற வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்பி வருகின்றனர். இதனால் ஊட்டியை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 

Tap to resize

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் மழையானது வெளுத்து வாங்கியது ஒரே நாளில் 50 செமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னயில் பல இடங்கள் மூழ்கியது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி போன்ற முக்கிய இடங்களும் தண்ணீரில் தத்தளித்தது. வீடுகள் மூழ்கியது. என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள் பல இடங்களில் வெள்ள்த்தில் மக்கள் அடித்து சென்றனர். கார்கள், பைக் போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் போனது.

இந்த பாதிப்பில் விடுபட சென்னை மக்களுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது. மழை அதிகம் பெய்ததால் தான் ஊருக்குள் தண்ணீர் வந்ததாக கூறப்பட்டது. இது போன்று இனியும் நடக்காது என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்  2022 மற்றும் 2023ஆம் ஆண்டு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது மக்களை வாட்டி வதைத்தது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தியது. மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாததே வெள்ளத்திற்கு காரணமாகவும் கூறப்பட்டது. 

Chennai Floods 2023

சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம் தென்மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. இதனால் இப்படிப்பட்ட வெள்ளத்தை தென் மாவட்ட மக்கள் வாழ்நாளில் பாத்திருக்க மாட்டார்கள். பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்தநிலையில் இந்தாண்டும் இதே நிலை நீடிக்கும் எனவும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு சென்னயே மூழ்கிவிடும் என யூடியுப்பில் விவாதித்து வருகின்றனர். தங்களிடம் உள்ள டேட்டாக்களை வைத்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இந்தாண்டு பருவ மழையின் போது தமிழகத்தில் மழை பாதிப்பு எப்படி இருக்கும். கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் மழை கொட்டுமா.? என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், தமிழகத்தில் இயல்பான அளவு மழைதான் பெய்து வருகிறது. எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

முன்பும் இதே போன்று மழை சென்னையில் கொட்டியுள்ளது. ஆனால் மக்கள் தொகை குறைவு, கட்டுமானங்கள் இல்லாத காரணத்தால் தண்ணீர் வெளியே செல்ல வழியிருந்தது. தற்போது வீடுகள் அதிகரித்துள்ளதால் மழை நீர் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சென்னையில் ஒரு நாளில் பொறுத்தவரை அதிகபட்சமாக 15 செ.மீட்டர் அளவு மட்டுமே மழையை தாங்கும் அதைவிட அதிகளவு மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலை நீடிக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களில் சென்னையில் பெய்த மழையின் அளவு அதிகரித்திருப்பது உண்மை. கடந்த 24 வருடத்தில் 20 முறைக்கு மேல் 20 செமீட்டர் மழை ஒரே நாளில் பெய்துள்ளது. அதே போல கடந்த 100 ஆண்டுகளில் 10 முறை மட்டுமே 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே தற்போதுள்ள கணக்கெடுப்பின் படி ஒரே மாதத்தில் அதிகபட்சமாக 100 செமீட்டர் மழை பெய்துள்ளது.

2023ஆம் ஆண்டு மிக்‌ஜாம் புயல் சென்னையில் கரையை கடந்து இருந்தால் கூட இவ்வளவு மழை பெய்திருக்காது. ஆனால் மேக கூட்டங்கள் நகராமல் சென்னை முழுவதும் அப்படியே நீடித்ததால் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தான் சென்னையில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிகளவு மழை பெய்தால் சென்னையை தண்ணீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் தங்கி விடும். இது படிப்படியாக வெளியேற 4 நாட்கள் பிடிக்கும்.

எனவே இந்தநிலையில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய வெள்ளம் சென்னையில் ஏற்பட இருப்பதாகவும் இதனால் சென்னை மீண்டும் மூழ்கும் என வெளியாகும் தகவல் தவறானது என தெரிவித்தார். இந்த மாதம் 15 செமீட்டருக்குள் தான் மழை பெய்யும் அதற்கு மேல் செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை பெய்யாது என கூறினார். இது தொடர்பாக பல வரலாற்று கணக்கீடு இருப்பதாகவும வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!