DMK : திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு! அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! யாருக்கு தெரியுமா?

First Published | Sep 6, 2024, 1:39 PM IST

DMK Ministers:திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மீண்டும் விசாரணை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

kkssr ramachandran

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்தது.

Anand venkatesh

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Tap to resize

Chennai High Court

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அதில், சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. இதனையடுத்து வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தினசரி விசாரணை நடத்த வேண்டும். செப்டம்பர் 11ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார். 
 

thangam thennarasu

இந்த வழக்கை மறு விசாரணை நடத்த தடை விதிக்கக்கோரி திமுக அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Latest Videos

click me!