பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு! சர்ச்சையால் தூக்கி அடிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்! நடந்தது என்ன?

First Published | Sep 6, 2024, 12:24 PM IST

School Education Department: சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆன்மீகப் பேச்சாளர் ஒருவரின் சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Ashok Nagar School

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில், இப்பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளிக்க பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி, இயங்கி வரும் மகாவிஷ்ணு என்பவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

Maha Vishnu Controversy

அப்போது அவர் பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் கை, கால்களை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறக்கிறார்கள் என பேசினார். அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது மகாவிஷ்ணு, அறிவற்றவர் என ஆசிரியரை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பில் இருந்தும் இவரது  பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. 

Tap to resize

School Education Department investigation

இந்நிலையில் கல்விக்கு தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிளையும் அரசு அனுமதியின்றி நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசு அனுமதி இல்லாமல் இனி  எந்த ஒரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக்கூடாது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக்கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். 

Ashok Nagar School

இதனிடையே ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர்  நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

Transfer of HeadMaster

இந்நிலையில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் முதற்கட்டமாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Latest Videos

click me!