8வது படித்திருந்தாலே போதும்.! சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு- தமிழக அரசு அறிவித்த அதிரடி திட்டம்

First Published | Sep 6, 2024, 12:13 PM IST

தமிழகத்தில் 8, 10ம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பயிற்சி பெற்று பயனடையலாம்.

அரசு வழங்கி வரும் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த கல்வி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பணிக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களின் உதவியோடு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

டாடா நிறுவனர் முதல் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கான பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை மூலம் வேலை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் அடுத்த பகுதியாக தொழிலதிபராக வர வேண்டும் என இளம் வயது முதல் ஆர்வமாக உள்ளவர்களுக்கும் தமிழக அரசு சார்பாக பயிற்சி வழங்கி மானியமும், கடன் உதவி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
 

சொந்த தொழில் தொடங்க பயிற்சி

இந்தநிலையில் 8வது மற்றும் 10வது படித்திருக்கும் இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமழிக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங்' தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சியானது வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

பயிற்சி முறைகள்

டிஜிட்டல் தொழிற்பயிற்சி

டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு கையாளுதல், சைபர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மார்க்கெட்டிங் உத்திகள், டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வது: சமூக ஊடகங்கள், எஸ்.சி.ஓ மற்றும் கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுதல்: உத்திகள் மற்றும் பார்வையாளர்களைப் பிரித்தல், டிஜிட்டல் இருப்பை உருவாக்குதல், சந்தை தேவைகளை உருவாக்குதல்,

டிஜிட்டல் வணிக தீர்வுகள், இணைப்பு மற்றும் நெட்வொர்க்குகள் போட்டிசந்தைப்படுத்துதல், சமூக ஊடக தரவு. டிஜிட்டல் இருப்பு. தேவை மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம்: அடிப்படை, போக்குகள் மற்றும் முக்கியத்துவம், போன்ற பாட தலைப்புகள்பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க தகுதிகள்

ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்குப் பெறுபவர்களுக்கு குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் விவரங்களை அறிய  விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. 8668100181/9841336033/044-22252081/82

வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி

இதே போல சொந்த தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் "தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோக பராமரிப்புக்கு உதவும் இரசாயன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.  சென்னையில் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பயிற்சி முறை

ரூம் ஃப்ரெஷ்னர் திரவம். துரு நீக்கி. மென்மையான சோப்பு, சானிடைசர். சோப்பு எண்ணெய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ், வாஷிங் பவுடர் பித்தளை மற்றும் செம்பு க்ளீனர் திரவம். டாய்லெட் மற்றும் டைல்ஸ் க்ளீனர். கார் வாஷ் ஷாம்பு, சோப்பு திரவம், டிஷ் வாஷ் திரவம். ஃபர்னிச்சர் மற்றும் மர பாலிஷ் திரவம், ஃப்ளோர் கிளீனர். ஃபேப்ரிக் சாப்ட்னர். கிளாஸ் கிளீனர். ஹேண்ட் வாஷ், ஹெர்பல் ஃபீனைல் மேற்கண்ட தயாரிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள். தயாரிப்புகளை சோதனை செய்வது. அதனை எப்படி சந்தைப்படுத்துவது குறித்த விவரங்கள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும் என கூறப்பட்டுள்ளது. 

தகுதிகள்

18 வயதிற்கு மேற்பட்ட குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8- வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் கூடுதல் தகவலுக்கு தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032 அலுவலகத்தை அனுகவும் தெரிவிக்கப்படுள்ளது. 

Latest Videos

click me!