ஸ்டாண்ட் அப் காமெடி டூ ஆன்மிகம்.! யார் இந்த மகா விஷ்ணு- இன்னொரு நித்யானத்தாவா.?

First Published Sep 6, 2024, 1:50 PM IST

ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, சென்னை அரசுப் பள்ளியில் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ஒருவரின் கண்டனத்தைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதால், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் எழுந்துள்ளன. எனவே யார் இந்த மகா விஷ்ணு என்ற கேள்வி எழுந்துள்ளது

ஆன்மிக சொற்பொழிவாற்றி மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நித்யானத்தா, இவர் ஆரம்பத்தில் திருவண்ணாமலையில் ஆசிரமத்தை தொடங்கியவர் படிப்படியாக வளர்ச்சி அடைந்தார். பல நாடுகளிலும் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வந்தார். இவரது சொற்பொழிவால் பலரும் ஈர்க்கப்பட்டனரர். இதனால் பல கோடி ரூபாய் கொட்டியது. வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் இளம் பெண்களை  அடைத்து வைத்திருப்பதாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனால் திருவண்ணாமலை ஆசிரமத்திலும் சோதனை நடத்தப்பட்டது.  பாலியல் சர்ச்சையிலும் சிக்கினார். பிரபல நடிகையோடு இருப்பது போல வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நித்யானத்தா தற்போது தனி நாடு ஒன்றை தொடங்கி குடியேறிவிட்டார். அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த வரிசையில் புதிதாக உதயமாகி இருப்பவர் தான் மகா விஷ்னு என்பவர், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்போது மாணவிகள் மத்தியில் பேசிய அவர், முன் ஜென்மம் தொடர்பாக பேசியுள்ளார்.  மேலும் ஒரு சிலர் கண் இல்லாமல் பிறக்கிறார்கள், வீடு இல்லாமல் பிறக்கிறார்கள், இறைவன் கருணையுடவர் என்றால் என் அனைவரையும் ஒன்று போல படைக்கவில்லையே ஏன்.?  ஒருவர் கோடிஸ்வரன் ஏழையாக இருக்கிறான். ஒருவன் ஹீரோவாக இருக்கிறார். மற்றொருவன்  வில்லனாக இருக்கிறான். அப்படி இருக்கிறான். இப்படி இருக்கிறான்.

Latest Videos


ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிறவியிலும் நீங்கள் என்ன செய்தீர்களோ என பேசிக்கொண்டிருக்கும் போதா அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார். 

 மறுபிறவி பற்றி பேசுகிறீர்கள், கர்மா பற்றி பேசுகிறீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதற்கு மஹா விஷ்ணு, நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன.? நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்கள் ஒரு கேள்வி கேட்போம். உங்கள் பெயர் என்ன.? உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் என ஒரு வித தோரணையாக எதிர்த்து பேசுகிறார். . 

அதற்கு அந்த ஆசிரியர் நீங்கள் பேசுவது தப்பு என பதில் அளிக்கிறார். இதற்கு மஹா விஷ்ணு தப்பு என்றால் எதற்காக என்னை பேச அழைக்கிறீர்கள். என்ன பேசனும்.? மறு பிறவி பற்றி ஏன் பேசுகிறீர்கள். ஆன்மிகத்தைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள் என ஆசிரியர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதற்கு மறு பிறவி பற்றி யார் பேசுவார்கள். ஆன்மிகத்தைப்பற்றி யார் பேசுவார்கள் என அடுத்தடுத்து திமிராக ஆசிரியரிடம் மஹாவிஷ்னு பேசினார்

அரசு பள்ளியில் ஆன்மிகத்தை பற்றி பேசக்கூடாது என ஆசிரியர் கூறுகிறார். இதற்கு மஷாவிஷ்ணு அரசு பள்ளியில் ஆன்மிகம் பேசக்கூடாது என எந்த சட்ட விதியில் இடம் உள்ளது. இந்திய சட்ட விதி கூறுவது என்ன.? உங்கள் முதன்மை கல்வி அலுவலரோடு நிங்கள் அதிக அறிவு பெற்றவரா என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். 

பாவ புண்ணியத்தை பற்றி போதிக்கவில்லையென்றால் எப்படி கற்றுக்கொள்வார். நீங்கள் பாவ புண்ணியத்தை பற்றி மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தீங்களா.? என மிரட்டல் தோணியில் கேள்வி எழுப்பினார். வாழ்க்கையை பற்றி நீங்கள் சொல்லிக்கொடுத்தீர்களா.? ஆசிரியர்கள் என்றால் என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா.?இவ்வளவு நாள் உங்களால் போதிக்க முடியாத கல்வியை ஞானத்தை நான் போதிப்பதாகவும் தெரிவித்தார். நீங்கள் எப்படி என்னிடம் சண்டைக்கு வரலாம் என தொடர்ந்து கூறினார். பப்ளிக்காக பேசினால் பப்ளிக்காக பேசுவேன். 

என ஆவேசமாக மஹா விஷ்ணு பேசிக்கொண்டிருகும் போதே மற்ற ஆசிரியர்கள் மஹா விஷ்ணுவை எதிர்க்காமல் ஆசிரியரை தொடர்ந்து சமாதானம் செய்து வைத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் விஷ்னு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையம், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மஹாவிஷ்ணு பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மஹா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் என் இடத்தில் வந்து என் ஆசிரியரை தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிக்கை உறுதி என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில் மஹா விஷ்ணுவை சொற்பொழிவிற்கு அழைத்து ஏற்பாடு செய்த சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அரசு பள்ளிகளில் மட்டுமில்லாமல் மேலும் இரண்டு பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மஹா விஷ்ணு பரம்பொருள் என்கிற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் இவர்  சொற்பொழிவுகளுக்கு நபர் ஒருவரிடம் பல ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக விஷ்ணு செய்து கொண்டிருந்ததாகவும் தற்போது மகாவிஷ்ணு என்ற பெயரில் இன்று  ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

click me!