இனி காணும் பொங்கல் அரசு விடுமுறை ரத்து? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்! என்ன காரணம் தெரியுமா?

First Published | Jan 20, 2025, 4:10 PM IST

காணும் பொங்கலன்று பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

Pongal festival

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 செவ்வாய் கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16  வியாழன் கிழமை உழவர் திருநாள் என 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்தால் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. 

chennai Marina Beach

இந்நிலையில் காணும் பொங்கலன்று பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக காட்சியளித்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. இதனையடுத்து பல நூறு டன் குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் அப்புறப்படுத்தினர். 

இதையும் படிங்க: 27ம் தேதி வரை தான் டைம்! பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!


National Green Tribunal

இந்நிலையில் காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரம் தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் சத்தியகோபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! இன்றே கடைசி நாள்!

Kaanum Pongal

அப்போது நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, மெரினா கடற்கரை குப்பைக் கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம். கடற்கரையை எப்படி பாதுகாப்பது என்று மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் காணும் பொங்கலன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என எச்சரித்துள்ளனர். இந்த பசுமை தீர்ப்பாயத்தின் எச்சரிக்கை பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!