job opportunities
வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் அரசு வேலையை குறியாக கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தொகுப்பூதியத்தில் பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கபட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
job
காலிப்பணியிடம்
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து)
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / மன நலம் /சட்டம் /பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை இவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி என்ன.?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / மன நலம் /சட்டம் /பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை இவற்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் திட்ட உருவாக்கம், செயல்படுத்துதல் கண்காணிப்பு, மேற்பார்வையில் 2 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் பணிசெய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்
ரூ.27804/-
குறிப்பு
40 வயது மேற்பட்டவர் களாக இருத்தல் கூடாது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் புகைப்படம் மற்றும் சுயக் கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ/அஞ்சல் வழியாகவோ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
jobs
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்.
மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலகு, சென்னை மாவட்டம் - தெற்கு
எண்:1, புதுத்தெரு, GCCவணிக வளாகம், முதல் மாடி,
ஆலந்தூர், சென்னை 600016. ( RTO office அருகில் )
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.