முல்லைப் பெரியாறில் ஒரே நாளில் கிடு கிடுவென உயர்ந்த நீர் மட்டம்.! எத்தனை அடி இருக்கு தெரியுமா.?

Published : May 27, 2025, 08:05 AM ISTUpdated : May 27, 2025, 08:07 AM IST

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 தினங்களில் நீர்வரத்து பத்து மடங்கு அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி 118.10 அடியாக உயர்ந்துள்ளது.

PREV
14
தென்மேற்கு பருவ மழை தீவிரம்

தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா மற்றும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பகுதியில் கிடு கிடுவென நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்குவது முல்லைப் பெரியாறு அணை. கடந்த சில மாதங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர் வரத்து மிகவும் குறைந்து

24
கேரளாவில் கொட்டும் மழை

இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து துவங்கியது. கடந்த 24 ஆம் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 487 கன அடியாக இருந்த நிலையில், 25 ஆம் தேதி 584 கன அடியாக அதிகரித்து, நேற்று வினாடிக்கு 1648 கன அடியாக மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 10 செமீ, தேக்கடியில் 10.5 செமீ மழை பதிவானது.

34
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

இதனால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5205.32 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களில் அணைக்கு நீர்வரத்து பத்து மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் நேற்று 115.65 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக ஒரே நாளில் மூன்று அடிவரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

44
குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

இன்னும் சில நாட்களில் முல்லைபெரியாறு அணை தனது உட்சபட்ச அளவை நீர்மட்டம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 2285.10 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில்,அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே 

Read more Photos on
click me!

Recommended Stories