தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோடை விடுமுறையானது முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தோடு ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு ரயில், பேருந்து, வேன் என முன்பதிவு செய்திருந்த நிலையில், ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் வந்தது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழையானது கேரளாவில் வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 2 நாட்களில் 70 செமீட்டர் மழை கொட்டியுள்ளது. இதனால் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
24
ஊட்டியில் கொட்டும் மழை
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இருந்த போதும் அதையும் மீறி பைன் மரக்காடுகள் பகுதியை பார்வையிட்ட போது மரம் விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீலகிரியில் மிக கனமழைகான ரெட் அலர்ட் இன்று வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட. உதகை, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பல பகுதிகளில் மண் சரிவுகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
34
சுற்றுலா தலங்கள் மூடல்
இதனிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட கடந்த 2 நாட்கள் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் , அவலாஞ்சி, பைன் மரக்காடுகள், படப்பிடிப்பு தளம், 9th மைல், கேர்னில் , போன்ற சுற்றுலா தளங்களும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள உதகை படகு இல்லம் , பைக்காரா படகு இல்லம், உதகை தாவரவியல் பூங்கா ,ரோஜா பூங்கா , போன்ற சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன .
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்களும் அதே போல் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள தாவரவியல் பூங்கா ,ரோஜா பூங்கா , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள படகு இல்லங்கள் போன்ற சுற்றுலா தளங்கள் மூடப்படும்.
குறிப்பாக உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அத்தியாவசிய தேவையை தவிர வெளியில் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது