விநாயகர் சதுர்த்தி.! 10 கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன என்ன தெரியுமா.?

Published : Aug 19, 2025, 02:50 PM IST

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துமாறும், தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

PREV
15
விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகிற 27ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து மிகப்பெரிய பிரம்மாண்ட சிலையானது பல இடங்களில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த கீழ்காணும் வழிமுறைகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

25
விநாயகர் சதுர்த்தி - செய்ய வேண்டியவை

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள்.

சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த. இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.

சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.

அகற்றி துவைத்து மீண்டும் அலங்கார அலங்காரத்திற்கு உபயோகிக்ககூடிய துணிகளையே பயன்படுத்தவும்.

பிரசாத விநியோகத்திற்கு மக்கும் /மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.

35
விநாயகர் சதுர்த்தி - செய்ய வேண்டியவை

பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.

அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

45
விநாயகர் சதுர்த்தி- செய்யக்கூடாதவை

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.

சிலைகளை அலங்கரிப்பதற்கு. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக். தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.

மேல் பூசிற்கும் சிலைகளின் | அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் இரசாயனசாயங்கள் தண்மையற்ற / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது,

வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே தூக்கியெறியகூடிய உபயோகித்து அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.

55
விநாயகர் சதுர்த்தி- செய்யக்கூடாதவை

பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள். கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.

அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.

ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.

ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

எனவே. பொதுமக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories