NTK: சீமான் சொன்ன அந்த வார்த்தை! காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாராம்! தெறித்து ஓடும் முக்கிய நிர்வாகிகள்

First Published Oct 3, 2024, 11:35 AM IST

Naam Tamilar Katchi: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து விலகியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவர் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் விவசாயி சின்னத்தில் தனித்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த முறை உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில்  விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த சின்னம் வேறுவோருக்கு வழங்கப்பட்டு சீமானுக்கு மைக் சின்னம் வழங்கப்பட்டது. இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று 8.9 % வாக்குகள் சதவீதம் பெற்று அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தார். 

இந்நிலையில், சீமானின் போக்கு சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகிய நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாளும் கடந்த சில மாதங்களாக கட்சி பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து விலகியது மட்டுமல்லாமல் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு குட்நியூஸ்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

Latest Videos


இதுதொடர்பாக கிருஷ்ணகிரி  மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன்: நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம். பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம். ஆனால், திமுக, அதிமுகவினர் உள்பட பணம் படைத்தவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் சீமான் செல்கிறார். எங்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2015ம் ஆண்டு முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 தொகுதி செயலாளர் ஆகவும் 2020ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம்.

இதையும் படிங்க:  Job Opportunities: வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! எங்கு? எப்போது? இதோ முழு விவரம்!

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம், கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். 

இதையும் படிங்க: TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

அண்ணன் கூறியது : இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார். ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார். 

click me!