காலாண்டு விடுமுறை- சிறப்பு வகுப்புகள்
இந்தநிலையில் காலாண்டு தேர்வானது தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடுமுறையானது 3 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து 10 நாட்களாக காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. அதன் படி அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, நெல்லை, மதுரை. நாகர்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசின் உத்தரவை மதிக்காமல் பள்ளிகள் செயல்பட்டது.மேலும் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டது.