7200 ரூபாய் உதவி தொகை.! அடித்தது ஜாக்பாட்- தமிழக அரசின் சூப்பர் திட்டம்

First Published | Oct 3, 2024, 10:56 AM IST

தமிழக அரசு பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

தமிழக அரசின் உதவித்திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி பிறந்த குழந்தை முதல் வயது முதிந்தவர்கள் வரை பல திட்டங்கள் செயல்படுத்தப்படு வருகிறது. அந்த வகையில், பிறந்த குழந்தைகளுக்கும் சத்தான உணவு கொடுக்கும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு 18ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதனையடுத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி முதல் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைபெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அடுத்ததாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவிட இலவச பேருந்து பயண திட்டமான விடியல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள்

அடுத்ததாக மகளிர் உரிமை தொகையையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சிறிய தேவைகளுக்கும் குடும்பத்தலைவிகள் யாருடைய உதவியும் தேவையின்றி வாழும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு சார்பாக அரசு பணியில் சேர்வதற்கான தேர்வில் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறது. மேலும் தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்காக சிறப்பு வேலை வாய்ப்பு முகாமும் நடத்தி வருகிறது.

இந்த சிறப்பு முகாம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக சொந்த தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கி, கடனுதவிக்கான வழிகாட்டியும் வருகிறது. 

Latest Videos


வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை

இந்த திட்டம் மட்டுமில்லாமல், படித்து முடித்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லையென்றாலும் தமிழக அரசு சார்பாக உதவிதொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும் அந்த வகையில் வருடத்திற்கு 2,400 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதே போல 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் என வருடத்திற்கு 3,600 வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 4800 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வருடத்திற்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது.

job opportunities

உதவி தொகை பயன் என்ன.?

இந்த திட்டத்தின் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு சுய விவரம் தயாரிப்புக்கும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அடிப்படையான மொபைல் போன் ரீசார்ஜ் உள்ளிட்ட தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

உதவி திட்டம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்

இந்த உதவி தொகையானது 10 வது, 12 வது மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5வருடத்திற்கு பிறகும் வேலை கிடைக்காதவர்களுக்கு  இந்த உதவி தொகை திட்டம் வழங்கப்படுகிறது. 

jobs

தகுதிகள்

உதவி தொகை பெறும் நபரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது

வயது - 40 , எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு  45 வயது

தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  மேலும் அரசு துறை மற்றும் தனியார் துறை பணியாற்ற கூடாது


நிபந்தனைகள்

1. வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறுவதற்கு வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் வருமானம் சான்று பெற்று மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

2. வேலைவாய்ப்பகத்திலிருந்து உதவித்தொகை பெற விண்ணப்பப் படிவம் கிடைத்த 30 நாட்களுக்குள் தனது மாவட்டத்திற்குள் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்புக் தொடங்கி கணக்கு எண். கிளையின் முழு முகவரி, கிளை குறியீட்டு எண் (Branch Code) உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் அமைந்துள்ளவாறு தெரிவிக்க வேண்டும்.

3. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை காலாண்டு முறையில்  கணக்கீடு செய்யப்பட்டு அந்தந்தக் காலாண்டு முடிவுற்ற பின்னர் விண்ணப்பதாரருடைய கணக்கில் செலுத்தப்படும்.

4. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 40 வயது முடிவுறும் வரையிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைப் பொறுத்தவரையில் 45 வயது முடிவுறும் வரையிலும் வழங்கப்படும்.

5. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்றுவரும் காலத்தில் அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ பணிநியமனம் பெற்றாலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டாலோ அது தொடர்பான விபரங்களை உடனடியாக உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கிடையில் அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ பணிநியமனம் பெற்றாலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டாலோ வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும்.

6. வேலைவாய்ப்பற்றோர் அரசு சார்பால் வழங்கப்படும் உதவித்தொகை பெறும் காலத்தில் பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும்.

உண்மைக்கு மாறான தகவல்

7. உண்மைக்கு மாறான விவரங்கள் அளித்து உதவித்தொகை பெறுபவரின் பதிவு இரத்து செய்யப்படும்.

8. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோர் மூன்று வருடத்திற்கு தொடர்ந்து உதவித்தொகைப்பெற ஆண்டுக்கு ஒருமுறை அதாவது 5வது காலாண்டிலும் 9வது காலாண்டிலும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சுயஉறுதி ஆவணத்தை (Self affidavit) உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

9. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை வாங்கினால் தங்களது  பரிந்துரை வாய்ப்பு பறிபோகுமோ என பதிவுதாரர்கள் அச்சப்படத் தேவையில்லை. உதவித்தொகை வழங்கப்படும் காலத்திலும் பதிவுதாரர்களது பெயர் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடர்ந்து விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

click me!