ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!

Published : Jan 25, 2026, 02:52 PM IST

மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ஒருபோதும் ஊழல் செய்ய மாட்டேன் என்று மேடையில் சபதம் எடுத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
13
ஊழல் குறித்து பேசிய தவெக தலைவர் விஜய்

மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், நான் ஒருபோதும் ஊழல் செய்ய மாட்டேன். என்னுடன் இருப்பவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய விஜய், ''அரசியலுக்கு வந்து விட்டபோதிலும், நாளை ஆட்சியில் அமர்ந்தாலும் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை போல ஊழல் செய்ய மாட்டேன்.

23
என் மீது ஊழல் கறை படிய விட மாட்டேன்

எப்போதும் என் மீது ஊழல் கறை படிய விட மாட்டேன். பொதுப்பணத்தில் ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன். என் மீது ஊழல் நிழல் பட விட விட மாட்டேன். இதேபோல் யாரும் ஊழல் செய்யவும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இதை நான் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

33
தவெகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

தொடர்ந்து தவெகவினர் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசிய விஜய், ''மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது. என்னோடு பயணிக்கும் உங்கள் ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும்.

 உங்களிடம் நம்பிக்கை இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. தயவுசெய்து அனைவரும் வேற்றுமைகளை மறந்து, ஓரணியில் இணைந்து உழைத்து வெற்றியை ஈட்டுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories