23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! எந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?

Published : Jan 25, 2026, 09:43 AM IST

சென்னை வானிலை ஆய்வு மையம், கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
23 மாவட்டங்களில் மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly Waves) நிலவுவதால், அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை தொடரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்கால மழை தாக்கமும் சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

25
சென்னை மழை அலெர்ட்

நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35
ஆரஞ்சு எச்சரிக்கை

இன்று (25-01-2026) காலை 10 மணி வரை 3 மணி நேர எச்சரிக்கையில், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு மிக கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் கனமழை வாய்ப்பு உள்ளது.

45
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதே நேரத்தில் காலை 10 மணி வரை அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையுடன் செல்லவும், நீர்நிலைகளின் அருகே கவனம் தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

55
மீனவர்கள் எச்சரிக்கை

26-01-2026 அன்று உள் தமிழகத்தில் சில இடங்கள், கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். ஆனால் 27 முதல் 29 ஜனவரி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது. கடல் பகுதிகளில், இன்று தென்மேற்கு வங்கக்கடலில் 40-50 கிமீ வேகத்தில் (சில நேரங்களில் 60 கிமீ) சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories