விஜய்யை பொறுத்தவரை தவெக தொடங்கியது முதல் திமுகவைவும், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடக்கத்தில் அதிமுகவை அவர் சுத்தமாக விமர்சிக்கவில்லை. இதனால் விஜய் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநாட்டில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி இன்று பாஜகவிடம் அடிமைபட்டு கிடப்பதாக மறைமுகமாக தாக்கினார்.
தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி
இதற்கிடையே அதிமுகவும், தவெகவும் கூட்டணி வைக்க போவதாக தகவல் கசிந்த நிலையில், பாசிச பாஜக மற்றும் அதனுடன் தொடர்பில் இருக்கும் எந்த கட்சியுடன் கூட்டணியில்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்பதை விஜய் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
அதிமுக தமிழகத்தில் செல்வாக்கு இழந்து விட்டதை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி வருகிறார். இது மட்டுமின்றி அதிமுக பக்கம் இருக்கும் வாக்குகளை நைசாக தவெக பக்கம் சாய்க்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விஜய் தொடர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார்.