VIJAY TVK : விஜய்க்கு ஒரே நாளில் இரண்டு மாங்காய்! வெளியான சூப்பர் அறிவிப்பு

Published : Sep 08, 2024, 11:52 AM ISTUpdated : Sep 08, 2024, 12:01 PM IST

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், விக்கிரவாண்டியில் நடைபெறும் கட்சியின் முதல் மாநாட்டிற்கும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

PREV
14
VIJAY TVK : விஜய்க்கு ஒரே நாளில் இரண்டு மாங்காய்! வெளியான சூப்பர் அறிவிப்பு

திராவிட கட்சிக்கு போட்டியாக விஜய்

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைவர்களாக இருந்த அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை முன்னோக்கி கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை விட ஒன்று மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

கல்வியறிவிலும் தமிழகத்தை முன்னோடியாக கொண்டு சென்றுள்ளனர். இந்தநிலையில் இந்த திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பல கட்சிகள் வந்தாலும் அந்த கட்சிகள் காலப்போக்கில் திமுக- அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிரம்மாண்டமாக கட்சி தொடங்கிய நிலையில் இரண்டு கட்சிகளும் திராவிட கட்சியின் கூட்டணிக்காக காத்துள்ளனர்.

24

ஒரே நாளில் இரண்டு குட் நியூஸ்

இந்த சூழ்நிலையில் தான் நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று வரும் விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தேர்தல் தான் தனது இலக்கு என தெரிவித்துள்ளவர். தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார். அடுத்ததாக கட்சிக்கான கொடி மற்றும் பாடல்களை வெளியிட்டுள்ளவர், மாநாடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் விஜய்க்கு இன்று ஒரே நாளில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். முதலாவதாக தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக்கழகத்தின் அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்த போலீசார் நிபந்தணையோடு அனுமதி வழங்கியுள்ளனர். 

34

மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட விஜய்

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம்.

இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்ததாகவும்,  அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளதாக கூறியுள்ளார். இந்த செய்தியை  இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனவும் விஜய் கூறியுள்ளார். 

44
TVK Vijay

மாநாட்டிற்கும் அனுமதி வழங்கிய போலீஸ்

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் என தெரிவித்துள்ளார். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம் எனவும் விஜய் கூறியுள்ளார். இதனிடையே விக்கிரவாண்டியில் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநாடு நடத்த போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories