Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?

First Published | Sep 8, 2024, 10:35 AM IST

Teacher Shankar: சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு முன் நிரூபிக்கப்படாத கருத்துக்களைப் பரப்பிய பேச்சாளரை எதிர்த்துப் பேசிய பார்வை குறைபாடு கொண்ட ஆசிரியர் சங்கரின் துணிச்சலான செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Ashok Nagar School

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கமளிக்க பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி, இயங்கி வரும் மகாவிஷ்ணு என்பவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அப்போது முன்ஜென்மம், அடுத்த ஜென்மம், கடந்த காலப் பாவங்கள் என தொடர்ந்து நிரூபிக்கப்படாத கட்டுக்கதைகள் குறித்து மட்டுமே மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

Minister Anbil Mahesh

அப்போது மனிதர்கள் முந்தைய பிறவில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில்  இந்த பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது பலர் கை, கால்கள் இல்லாத நிலையில், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கின்றனர் என்று மகாவிஷ்ணு பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுமொத்த பள்ளியிலும் அமைதியாகே கேட்க சார் ஆன்மீக சொற்பொழிவா அல்லது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் ஸ்பீச்சா என்று பார்வை குறைபாடு கொண்ட ஆசிரியர் சங்கர் வெகுண்டெழுந்தார். ஆனால் மற்ற ஆசிரியர்கள் யாரும் துணைக்கு வரவில்லை. விவரம் தெரியாத மாணவர்களும் கைத்தட்டி ரசித்தனர். 

Tap to resize

Teacher Shankar

இதனால் மகா விஷ்ணு மற்றும் பேச்சாளர் மகா விஷ்ணு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மிரட்டும் வகையில் பேசினார். ஆனால், எதற்கும் கலங்காமல் தனி ஆளாக நின்று எதிர்த்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக பள்ளிக்கே சென்று தமிழாசிரியர் சங்கரை பாராட்டினார். 

இதையும் படிங்க: School Education Department: முடியவே முடியாது! ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

teacher shankar

இந்நிலையில் ஆசிரியர் சங்கரின் துணிச்சல் எங்கிருந்து வந்தது யார் இவர் என்பதை பார்ப்பபோம். பார்வை மாற்று திறனாளிக்கான தனி சிறப்பு பள்ளிகள் இயங்கி வந்தாலும் அதில் படிக்காமல் எல்லோரும் படிக்கக்கூடிய பள்ளியில் தான் படித்தார். அவர்களின் கிண்டல் கேலி அனைத்தையும் எதிர்கொண்டார். 12ம் வகுப்பில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பள்ளி படிப்பை தொடர்ந்து கல்லூரியிலும் சிறந்த மாணவராக திகழ்ந்தார். தமிழில் பிஏ,  எம்.ஏ., பி.எட். படிப்புகளை படித்து தற்போது பி.எச்.டி. முடித்துள்ளார். 2009ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்தார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் பார்வை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் ஆசிரியராகவில்லை. மெரிட்டில் அனைவரிடமும் போட்டி போட்டு ஆசிரியராக பொறுப்பேற்றார் சங்கர்.  

இதையும் படிங்க: Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்! பெட்ரோல், டீசல் விலை குறைகிறது? எவ்வளவு தெரியுமா?

Teacher Shankar Profile

சங்கரின் மனைவியும் ஒரு அரசு ஊழியர். அவரும் பார்வை குறைபாடு உடையவர். சங்கரின் முதல் தம்பி வருவாய் ஆய்வாளராக உள்ளார். இவரும் பார்வை மாற்றுத்திறனாளி. இரண்டாவது தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்டவர். பள்ளி, கல்லூரி காலங்களில் தனியார் அங்காடியில் பணியாற்றிய தன்னுடைய தந்தைக்கு துணையாக நின்று உதவிகளை செய்து கொண்டே குடும்பத்தை முன்னேற்றியுள்ளார். முக்கியமாக தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு சிறப்பு சலுகைகள் வேண்டும் என எந்த இடத்திலும் எதிர்பார்க்காதவர். கடந்த பிப்ரவரி மாதம் பகுத்தறிவு என்ற தலைப்பில் பிஎச்டி பட்டம் பெற்றார். அந்த பகுத்தறிவு சிந்தனையில் இருந்து பிறந்தது தான் முனைவர் சங்கரின் நியாயமான கோபம். என்னுடைய மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத விஷயத்தை சொல்லும் நீ எதை சொல்லிக்கொடுக்க முயற்சி செய்கிறார் என்ற ஆதங்கத்தை சங்கர் வெளிப்படுத்தியுள்ளார். 

Latest Videos

click me!