ஊட்டிக்கு போற ஐடியா இருக்கா! பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள் எது தெரியுமா.? வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Sep 8, 2024, 9:36 AM IST

தமிழகத்தின் மலைப்பிரதேச சுற்றுலாவின் மகுடமாக விளங்கும் ஊட்டி, இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பூங்காக்கள், அருவிகள் மற்றும் ஏரிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இயற்கையின் சொர்க்கம் ஊட்டி

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும் இயற்கையை ரசிக்கவும்  தமிழக மக்களுக்குமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேராளவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிந்து வருவார்கள். அந்தவகையில் உதகையில் பல முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, என பல இடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் தோட்டக்கலைத்துறைக்கும், வனத்துறையும் சொந்தமாக உள்ளது.  

இதில் தமிழகத்தில் மலைப்பிரதேச சுற்றுலா என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடாகும். இந்த பகுதியில் உள்ள பசுமை நிறைந்த புல்வெளிகளும், அடர்ந்த காடுகள், குளுமையாக வீசும் காற்றும், கை நீட்டும் தொலைவில் செல்லும் மேகக்கூட்டங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும். 

முதுமலை - யானைகள் முகாம்

இதனை ரசிப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் இந்த பகுதிகளுக்கு குவிந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலைப்பகுதிக்கு செல்வதை விரும்பாமல் இருந்ததில்லை. பல இடங்களில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தாலும். ஊட்டியை அனைத்திலும் முன்னோடியாக உள்ளது. இங்கு ஊட்டி ஏரி, சில்ட்ரன்ஸ் பார்க், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, எமரால்டு ஏரி, அவலாஞ்சி, முதுமலை வன விலங்கு பாதுகாப்பகம், ரோஸ் கார்டன், பைகாரா அருவி என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதில் முக்கியமானது ஊட்டி ரயில் பயணமாகும். 

Latest Videos


ஊட்டி ஏரியில் படகு சவாரி

முதுமலை வனவிலங்கு காப்பகமானது கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது.  முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். இங்கு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை,  மான், பறக்கும் அணில் போன்ற பல்வேறு வகையான விலங்குகள் ஏராளமாக உள்ளது. அடுத்ததாக ஊட்டி ஏரியின் அழகை ரசிக்கவே கண்கள் போதாது. அந்தளவிற்கு இயற்கையோடு கலந்திருக்கும், 

65 ஏக்கர் பரப்பளவில் அழகே வடிவாய் அமைந்திருக்கிறது ஊட்டி ஏரி. இங்கிருக்கும் படகு இல்லம் பிரபலமானது. இங்கே படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அடுத்ததாக குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவாக சில்ட்ரன்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களும், விளையாட்டு சாதனங்களும் உள்ளது. 

ooty

தாவரவியல் பூங்கா

பொட்டானிக்கல் கார்டன் என அழைக்கப்படும் தாவரவியல் பூங்காவனது பரந்து விரிந்த புள்வெளியை கொண்டதாகும், இங்கு  வண்ண வண்ண மலர்களும், மூலிகைகளும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும்மெய் சிலிர்க்க வைக்கும். போட்டோ ஷூட் எடுக்க முக்கிய பகுதியாகவும் உள்ளது. அடுத்ததாக தொட்டபெட்டாவாகும். மிக உயரமான மலையாகும், தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாக உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2623 மீட்டர் உயராகும். இங்கு மேகங்கள் உரசி செல்லும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அடுத்ததாக ரோஜா பூங்காவில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ரோஜாக்கள் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

எமரால்டு ஏரியின் அழகு

சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த ரோஜா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏமாரால்டு ஏரி மற்றும் அவலாஞ்சி போன்ற இடங்களும் மக்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகை கொண்டதாகும். இந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது ஓடும் ஆறுகளும் பள்ளத்தாகும் மிக அழகாக இருக்கும். 

ஊட்டி மலை ரயில்

அடுத்ததாக பைகாரா அருவி மற்றும் படகு சவாரியாகும் கூடலூர் செல்லும் சாலையில் இந்த பைக்காரா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி புது அனுபவத்தை கொடுக்கும், இது போன்ற முக்கிய இடங்கள் உதகையில் இருந்தாலும், உதகைக்கு மக்கள் செல்ல விரும்புவது மலை ரயிலில் தான் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் இயக்கப்படுகிறது.

மலைகளில் நடுவே வளைந்து செல்லும் இந்த இடங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் பயணம் செய்ய விரும்பார்கள். குகைகளில் செல்லும் போது மக்கள் மகிழ்ச்சியில் எழுப்பும் கூச்சல் அழகானது. ஆனால் மழை பெய்தால் ஏற்படும் நிலச்சரிவால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும்

பாதிக்கப்படும் ரயில் சேவை

இந்தநிலையில் ஊட்டிக்கு வரும் மக்களை கவரும் வகையில் பல இடங்களில் பல வண்ணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதையில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வண்ண நடை பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் அறிவிப்பு

அதன் படி இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் படி குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை மிஸ் பன்னாதீங்க.

click me!