ராமநாதபுரத்தில் நெஞ்சை உலுக்கும் விபத்து: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி!

First Published | Sep 8, 2024, 8:17 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். நடுரோட்டில் நின்ற பேருந்தின் மீது கார் மோதியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

ராமநாதபுரத்தில் கார் விபத்து

நெடுஞ்சாலை விபத்துக்கள் நாள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை விபத்தின் மூலம் மட்டுமே ஒரு மாதத்தில் மட்டும் பல ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கச்சிமடத்தில் நகை கடை உரிமையாளரின் குடும்பத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து இரவு நேரத்தில் தங்கச்சிமடத்திற்கு திரும்பியுள்ளனர்.

5 பேர் துடிதுடித்து பலி

அப்போது பிரப்பன் வலசை பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் நகைகடைக்காரரின் குடும்பத்தினர் 5 பேர் துடிதுடித்து பலியானார்கள். 1. ராஜேஷ் (33) 2. செந்தில் மனோகரன்(70) 3. பிரணவிகா(04) 4. தர்ஷிலா ராணி(08) 5.அங்காலேஸ்வரி(58) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சபரி பிரிட்டோ (35) மற்றும்  2. பாண்டி செல்வி(28) ஆகியோர் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய ரேஷன் கார்டு கிடைத்து விட்டதா.? தயார் நிலையில் ஒரு லட்சம் ஸ்மார்ட் கார்டு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
 

Tap to resize

விபத்திற்கு காரணம் என்ன.?

நடுரோட்டில் பேருந்து நின்றது தொடர்பாக போலீசார் விசாரித்த போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் வாந்தி எடுத்துள்ளார். இதன் காரணமாக பேருந்தில் இருந்த மற்ற நபர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நடு ரோட்டில் நிறுத்தியுள்ளார். அப்போது அதி வேகத்தில் வந்த கார் பேருந்து மீது மோதியதில் 5 பேர் இறந்துள்ளனர்.இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Latest Videos

click me!