TVK Vijay, aadhav arjuna, விஜய் நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு வியூக வகுப்பாளரையும், சமூக ஊடக செயல்பாட்டாளரையும், மன்றங்களை ஒருங்கிணைக்கிற ஆனந்த் போன்றவர்களை மட்டும் வைத்து ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.
கரூரில் 41 பேர் மரணம் என்பதும், அதைத் தாண்டி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற ஆதவ் அர்ஜுனாவின் சமூக வலைதள பதிவும் ஒட்டுமொத்த நீதித்துறையையும் விஜய்க்கு எதிராக நிறுத்திவிட்டது என கே.சி.பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுகவின் வழக்கறிஞர் பிரிவு என்றைக்கும் வலிமையானது, ஜெயலலிதா அம்மா அவர்களுக்கே பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது.
27
ஆதவ் அர்ஜுனா
விஜய் நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு வியூக வகுப்பாளரையும், சமூக ஊடக செயல்பாட்டாளரையும், மன்றங்களை ஒருங்கிணைக்கிற ஆனந்த் போன்றவர்களை மட்டும் வைத்து ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. 41 பேர் மரணம் என்பதும், அதைத் தாண்டி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற ஆதவ் அர்ஜுனாவின் சமூக வலைதள பதிவும் ஒட்டுமொத்த நீதித்துறையையும் விஜய்க்கு எதிராக நிறுத்திவிட்டது.
37
அஸ்ரா கார்க்
இன்றைய தீர்ப்புகளில் ஒன்று, அஸ்ரா கார்க் நேர்மையான திறமையான அதிகாரி என்று எல்லா மட்டங்களிலும் பெயரெடுத்தவர், அவர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அது வரவேற்கத்தகுந்தது, ஆனால் அதன் விளைவு CBI விசாரிக்க வேண்டும் என்கிற விஜய் மற்றும் பாஜகவின் முயற்சியை இன்றைய தேதிக்கு தடுத்து விட்டது. இந்த உத்தரவை விஜயால் உச்ச நீதிமன்றம் சென்று எந்த அளவு மாற்றம் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி தான்.
ஆதவ் அர்ஜினாவின் அந்தப் பதிவு உண்மையிலேயே இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்து, அதற்கு அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும், ஆனால் அதை அவர் தனிப்பட்ட முறையில் முன்கூட்டியே அறிந்த காரணத்தினால் சென்னையில் இருந்து தப்பிச் செல்வதற்காக ஏதோ டெல்லி செல்வதாகவும், தனியாக சென்றால் கைது செய்து விடுவார்கள் என்பதாலும், தப்பி ஓடுவதாக செய்திகளும் வந்து விடும் என்பதாலும் விஜயின் Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளோடு தப்பி சென்று இருக்கிறார். குற்றம் செய்துவிட்டு இப்படி தப்பித்து ஓடுவது இன்னும் மோசமான நிலையை விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறது.
57
பிரச்சார பேருந்து
விஜயினுடைய பிரச்சார பேருந்து, அதில் அடிபட்டவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு விஜய்க்கு நெருக்கடிகளை உண்டாக்கியுள்ளது.
67
விஜயும் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு
ஆனந்த் மற்றும் மற்றவர்களின் முன் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜயும் குற்றவாளியாக சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 1977ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மீது மதுரை விமான நிலையத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் பொழுது திமுகவினரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கட்சியினுடைய தலைவர் என்கிற முறையில் கருணாநிதி அவர்கள் முதல் குற்றவாளி A1, பொதுச்செயலாளர் அன்பழகன் இரண்டாம் குற்றவாளி A2 மற்றும் மதுரையில் அதற்கு சம்பந்தப்பட்டவர்களோடு சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கலைஞரும், அன்பழகனும் குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்பட்டாலும் அந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பின்னாளில் காங்கிரஸ் உடன் கூட்டணி ஏற்பட்ட காரணத்தினால் அந்த வழக்கு நீர்த்துப் போய்விட்டது. அதேபோல விஜய்யும் இந்த வழக்கை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.
77
விஜய் VS திமுக
மக்கள் மத்தியில் விஜய் VS திமுக என்கிற ஒரு அரசியல் பிம்பம் தற்பொழுது கட்டமைக்கப்பட்டு விட்டது. இது விஜய்க்கு சாதகமான அம்சம். ஆனால் திமுகவுக்கு அடிபணியாமல், பாஜகவின் அழுத்தத்திற்கும் பணியாமல் மத்தியில் ஆளுகிற பாஜகவையும், மாநிலத்தில் ஆளுகிற திமுகவையும் எதிர்கொண்டு வலு குறையாமல் போராடி தேர்தலை சந்தித்து தன் பலத்தை நிரூபித்தால் நிச்சயம் தமிழகத்தில் விஜய்க்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.