இன்னும் மாநாடே தொடங்கலை.! அதற்குள் இப்படியா.? விஜய்க்கு போன ஷாக் செய்தி

First Published | Oct 27, 2024, 8:06 AM IST

நடிகர் விஜய் தனது புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை இன்று நடத்துகிறார். கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க உள்ள நிலையில், விஜய்க்கு ஷாக் கொடுக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Vijay TVK

அரசியல் களத்தில் விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழ் திரைத்துறை மட்டுமில்லாமல் தென் இந்தியாவில் அதிக வசூல் சாதனை படைப்பது நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் தான். ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் விஜய், அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார்.  தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்த விஜய், அக்கட்சியின் கொடி மற்றும் பாடல்களை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் விஜய் அறிவித்தார்.

மாநாடு அனுமதி கிடைப்பதில் தாமதம்

அந்த வகையில் செப்டம்பர் மாதம் மாநாட்டை நடத்த பணிகள் தொடங்கிய நிலையில் காவல்துறை அனுமதி கிடைப்பது காலதாமதம் ஏற்பட்டதால் திட்டமிட்ட காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு நிபந்தனைகள் விதித்து மாநாட்டிற்கு அனுமதி கிடைத்தது.  அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என புதிதாக தேதி அறிவிக்கப்பட்டது.

அதன் படி இன்று மாலை நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். எனவே நடிகர் விஜய்யின் அரசியல் திட்டம் என்ன.கொள்கை என்ன? கொடியில் இடம்பெற்று இருக்கும் யானை மற்றும் பூக்கள் எதை குறிக்கிறது என்பது தொடர்பாக இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

Tap to resize

Vijay TVK Flag

பாதுகாப்பு தீவிரம்

எனவே விஜய்யின் உரையை கேட்க பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் ஆவலாக உள்ளது. மாநாட்டிற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  காவல்துறையோடு இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனமும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் விஜய் இன்று தான் தனது முதல் அரசியல் மாநாட்டு மேடை ஏறவுள்ளார். அதற்குள்ளாகவே அக்கட்சியின் நிர்வாகிகள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

கட்சி மாறிய நிர்வாகிகள்- விஜய் ஷாக்

கடலூர் மாவட்டம் நெய்வேலி, காடாம்புலியூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் திடீரென தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகி தமிழரசன் உள்ளிட்டவர்கள் இணைந்தனர். தமிழக வெற்றிக்கழகத்தில் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்திற்கு மாநாடு தொடர்பாக தங்கள் பகுதியில் வைத்த பேனர்களை அப்பகுதி இளைஞர்கள் அகற்றியுள்ளனர்,

TVK Vijay

விஜய் என்ன சொல்கிறார்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று தான் தனது கட்சியின் கொள்கை. செயல்பாடு தொடர்பாக அறிவிக்கவுள்ளார். அதற்குள்ளாகவே கட்சியின் செயல்பாடு பிடிக்கவில்லையென 100க்கும் மேற்பட்டவர்கள் விலகியது விஜய் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Latest Videos

click me!