இனி ஈசியா லீவு எடுக்கலாம்.! அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 27, 2024, 7:18 AM IST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு எடுப்பதை எளிதாக்கும் வகையில், புதிய ஆட்டோ அப்ரூவல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், விடுப்பு தானாகவே அங்கீகரிக்கப்படும்.

tamilnadu bus

ஊழியர்களுக்கு விடுப்பு விண்ணப்ப வசதி

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று விடுப்பாகும். அந்த வகையில் ஈசியாக விடுப்பு எடுக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநகர் போக்குவரத்து கழகத்தில். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர் செயலி (MTC Staff Mobile App) 29.02.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு,

அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை மேலும் மேம்படுத்தும் வகையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு வழங்குவதை எளிதாக்கிட. AUTO APPROVAL முறை மூலம் விடுப்பு வழங்கும் வசதி 01.11.2024 முதல் இச்செயலியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

holiday

விடுப்பு எடுப்பது எப்படி.?

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு கோரும் பொழுது, விடுப்பு கோரும் நாட்களுக்கு முந்தைய மாதத்தில் குறைந்தது 24 நாட்கள் பணிபுரிந்திருந்தால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு தானாகவே Auto approval முறையில் அங்கீகரிக்கப்படும். இம்முறையில் வழங்கப்படும் விடுப்பானது கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு கோரும் நாட்களுக்கு முந்தைய மாதத்தில் 24 நாட்கள் பணிபுரிந்திருக்கும் பட்சத்தில்,

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான விடுப்பு தானாகவே Auto approval முறையில் அங்கீகரிக்கப்படும். ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு. அதிகபட்சமாக 6% விடுப்பு Auto approval முறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அங்கீகரிக்கப்படும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுப்பு வழங்கப்படும்.

Tap to resize

bus driver

ஈசியாக விடுப்பு எடுக்க வாய்ப்பு

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு மாதத்தில், அதிகபட்சமாக 2 நாட்கள் வரை இம்முறையில் (Auto approval) விடுப்பு அங்கீகரிக்கப்படும். அவ்வாறு Auto approval மூலம் வழங்கப்படும் விடுப்பு CL ஆக கணக்கிடப்படும். CL இல்லாத நிலையில் Auto approval முறை மூலம் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய இயலாது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு கோரும் நாட்களுக்கு ஒரு நாள் முன்னதாக, உதாரணமாக 05.11.2024 அன்று விடுப்பு வேண்டுபவர்கள் 03.11.2024 அன்று நள்ளிரவு 12 மணி வரை விடுப்பு கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், அதிகபட்சமாக 30 நாட்கள் முன்னதாக விடுப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.
 

bus conductor

விடுப்பு கேட்டு மேல் முறையீடு

Auto approval மூலம் விடுப்பு பெற தகுதி பெறாத ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அதாவது, முந்தைய மாதத்தில் 24 நாட்கள் பணி புரியாத ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களது விடுப்பு மற்றும் Auto approval-ல் 6% மேல் விண்ணப்பிக்கப்படும் விடுப்புகள் கிளை மேலாளர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்படும். இம்முறையில் விடுப்பு அங்கீகரிக்கப்படாவிட்டால் மேல்முறையீடு செய்யும் வசதி இச்செயலியில் உள்ளது.

மேலும், விடுப்பு கோரி விண்ணப்பிக்காமல் எடுக்கப்படும் விடுப்பு ஆப்சென்ட் (Absent) ஆக கருதப்படும். எனவே, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் Auto approval-ன் வழிமுறையை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விடுப்பினை MTC Staff Mobile App செயலி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Videos

click me!