Transport Department: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பேருந்துல போறீங்களா? அப்படினா இதோ முக்கிய செய்தி!

First Published | Oct 26, 2024, 5:28 PM IST

Transport Department: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மூன்று முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Diwali Festival

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல  14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

Special Bus

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மூன்று முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Kalaignar Centenary Bus Terminus

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் :

திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

koyambedu bus terminus

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் : கோயம்பேடு

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள்.

Madhavaram Bus Terminus

மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

Government Bus

எனவே ,பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 28 முதல் 30 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30ம் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!