அந்த வகையில் இந்த மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், நீண்ட காலமாக உடல் நல பிரச்சனை உள்ளவர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்க வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் அந்த வாகனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான நபர்களை மட்டுமே ஏற்றி வர வேண்டும் என்றும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்சி தலைமை பல அறிவுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழலில் மேலும் இரண்டு புதிய விதிகள் மாநாட்டிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.