தீபாவளி பண்டிகை: சுங்கச்சாவடிகளில் இலவச பயணம் - நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி

Published : Oct 27, 2024, 07:35 AM ISTUpdated : Oct 27, 2024, 07:38 AM IST

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்துவிட்டு இலவசப் பயணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

PREV
15
தீபாவளி பண்டிகை: சுங்கச்சாவடிகளில் இலவச பயணம் - நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி
Toll Booth

நாடு முழுவதும் வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் சிரமமின்றி கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் சுமார் 12,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தனியார் பேருந்துகள், ஆமினி பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் வாடகை வாகனங்கள், கார்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுப்பர்.

25
Toll Booth

இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதால் சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

35
Toll Booth

இதனை தவிர்க்கும் விதமாக பண்டிகை காலங்களில் சுங்கக்கட்டணங்களை ரத்து செய்துவிட்டு வாகனங்கள் இலவசமாகவே சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

45
Toll Booth

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த சுங்கச்சாவடிகளில் பேதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிக வாகனங்கள் வரும் திசையில் கவுண்டர்களை அதிகப்படுத்துவது, ஸ்கேனர்களை அதிகம் பயன்படுத்துவது, அதிகப் பணியாளர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

55
Toll Booth

ஏற்கனவே ஆயுதபூஜை பண்டிகையின் போது வாகன நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டன. அதே போன்று தீபாவளி பண்டிகையின் போதும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் கட்டணத்தை ரத்து செய்துவிட்டு வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories