55 நாட்களுக்கு பிறகு மக்களை சந்திக்கும் விஜய்! QR Code என்ட்ரி! அரசியலில் இது புதுசு!

Published : Nov 23, 2025, 09:26 AM IST

Vijay's TVK Public Meet: தவெக தலைவர் விஜய் 55 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார். தமிழக அரசியலில் முதன் முறையாக QR Code மூலம் என்ட்ரி கொடுக்கப்படுகிறது.

PREV
14
மீண்டும் வேகமெடுக்கும் தவெக

கரூர் சம்பவத்துக்கு பிறகு ஒரு மாதம் முடங்கி கிடந்த தவெக மீண்டும் வேகமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அண்மையில் தவெக பொதுக்குழுவும் கூடி கூட்டணி நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மீண்டும் எப்போது மக்களை சந்திப்பார்? என எதிர்பார்ப்பு நிலவியது. அவர் மீண்டும் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

24
இன்று மக்களை சந்திக்கும் விஜய்

விஜய் சேலத்தில் பிரசாரம் செய்ய தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில், சேலத்துக்கு முன்பாக விஜய் இன்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

34
நெசவாளர்கள், விவசாயிகளின் குறைகளை கேட்கிறார்

காஞ்சிபுரத்தை சுமார் 2,000 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்து விஜய் பேசுகிறார். அவர்கள் 2,000 பேருக்கும் QR Code உடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் இந்த QR Code காண்பித்தால் தான் உள்ளே செல்ல முடியும். ஆகவே நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் கண்டிப்பாக உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். விஜய் இன்று நெசவாளர்கள், விவசாயிகளை இன்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கிறார்.

44
தவெக தொண்டர் பாதுகாப்பு படை

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள விஜய்ய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

 கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன்முறையாக விஜய் மக்களை சந்திக்க உள்ளதால் விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடி விடக்கூடாது என்பதில் தவெக உறுதியாக உள்ளது. அவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் பாதுகாப்புக்காக தவெக தொண்டர் படை உருவாக்கப்பட்டது. அவர்கள் சுமார் 1 கிமீ வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories