ஜனநாயகனை விடுங்க.. தேர்தல் பணிகளில் பிஸியான விஜய்.. ரெடியாகும் தேர்தல் அறிக்கை.. முக்கிய அறிவிப்பு!

Published : Jan 09, 2026, 02:27 PM IST

ஜனநாயகன் திரைப்பட விவகாரம் நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும் நிலையில், இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வரும் விஜய், தேர்தல் அறிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

PREV
14
ஜனநாயகனுக்கு பெரும் சிக்கல்

தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இன்று (ஜனவரி 9) வெளியாக இருந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜனநாயகனுக்கு உடனே சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்ட நிலையில், தணிக்கை வாரியம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் ஜனநாயகன் எப்போது வெளியாகும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.

24
தேர்தல் பணிகளில் விஜய் பிஸி

இதனால் விஜய்க்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், விஜய் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறார். ஆனால் மறுபக்கம் தேர்தல் பணிகளில் பிஸியாக உள்ள விஜய், தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

34
தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.

மக்களிடம் கருத்துகளை கேட்கும் குழு

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள். மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

44
தவெக தேர்தல் அறிக்கை குழுவில் யார்? யார்?

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது. 

தேர்தல் அறிக்கைக் குழு விவரம்:

1.Dr. K.G. அருண்ராஜ் MBBS., ExIRS.

2. J.C.D.பிரபாகர் BA. Bt.. Ex. MLA.

3. A. ராஜ்மோகன் BTech. IT

4. T.S.K. மயூரி MA.

5. பேராசிரியர். A. சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D.

6. M.அருள் பிரகாசம் M.Com.

7. விஜய் R. பரணிபாலாஜி BA.LLB.

8. J.முகமது பர்வேஸ் B.A. LLB. (HONS)

9. . Dr.TK. பிரபு BDS., MSD., MSC., ICDL, FICOL

10.K. கிறிஸ்டி பிருத்வி BE, MBA.

11. M.K. தேன்மொழி பிரசன்னா B.Tech IT

12. வழக்கறிஞர் M. சத்யகுமார் LLM, ACA, ACMA, ACS, CIMA-ACMA(UK), CGMA(US). CISI-ACSI(UK), MA(Eco), PhD.

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Read more Photos on
click me!

Recommended Stories