தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள முதல்வரின் படங்களை அழிப்பதில் மாணவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் கொரோனா கால நிதிநிலை நெருக்கடியைக் காரணம் காட்டி கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்திட்டத்திற்கு தமிழக அரசு மீண்டும் உயிரூட்டி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
23
லேப்டாப்பில் முதல்வர் படங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துணைமுதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்டவாரியாக மாணவர்களுக்கு லோப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களில் அப்போதைய முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு இருக்கும். அதனை மாணவர்கள் எளிதாக அகற்றிவிட்டு லேப்டாப்களை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போதைய இலவச லேப்டாப்களில் ஒரு புறம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், மறு புறம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படமும் லேசர் பிரிண்டிங்கில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோககிக்கப்பட்டு வருகிறது.
33
இணையத்தில் வைரலாகும் வீடியோகள்
லேப்டாப்களில் முதல்வரின் படம் லேசர் பிரண்டிங்கில் பதிவு செய்யப்பட்டள்ளதால் அதனை மாணவர்கள் அப்படியே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் வி்ஞ்ஞான ரீதியில் தங்கள் மூளையை பயன்படுத்தி முதல்வரின் படத்தை அழித்து அதனை தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி பெயிண்டர்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய தின்னர், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி படங்களை அழித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.