கண்டிஷன் மேல கண்டிஷன் போட்ட போலீஸ்.. விழி பிதுங்கும் தவெக நிர்வாகிகள்..!

Published : Sep 19, 2025, 02:36 PM IST

TVK Vijay Election Campaign | நாகையில் தமிழக வெற்றி கழக தவைர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில்ல, மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது.

PREV
15
20 நிபந்தனைகளுடன் அனுமதி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் நாகையில் 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் தலைவர் விஜய் மதியம் 12:25 முதல் ஒரு மணி வரை தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

25
விஜய் வாகனத்தை பின்தொடரக் கூடாது

வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விஜய் செல்லும் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம், கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது.

35
பிற அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு

விஜய் பயணம் செய்யும் சாலையில் பிரதான இரண்டு கட்சிகளான திமுக, அதிமுக அலுவலகங்கள் இருப்பதால் அங்கு பிரச்சனைகள் வராத வண்ணம் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

45
கம்பு, குச்சிக்கு தடை..!

பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது. பரப்புரை என்பது அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது அப்படி ஏற்படுத்தினால் அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரயில்வே கேட் இருப்பதால் ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

55
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது..

புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா பெரியார் சிலை தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும், மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories