விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு: அதிரடிக்கு தயாராகும் டெல்டா.! நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட தவெக

Published : Sep 19, 2025, 01:01 PM IST

Vijay campaign tour : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "உங்கள் விஜய், நான் வரேன்" என்ற தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடர்கிறார். நாளை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். 

PREV
14
"உங்கள் விஜய், நான் வரேன்"

தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னனி நடிகராக இருப்பவர் விஜய், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 2024 பிப்ரவரி 2-ஆம் தேதியன்று தொடங்கி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். 

இந்தத் தேர்தலுக்கு முன், அவர் நடத்தும் முதல் மாநில அளவிலான பிரச்சாரப் பயணம் "உங்கள் விஜய், நான் வரேன்" என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது மற்றும் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிரசாரம் செய்யவுள்ளார்.

24
மக்களை சந்திக்கும் விஜய்

கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், நாளை நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிலையில் பிரச்சார பணிகள் மேற்கொள்ளும் வகையில் தவெக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு:

34
நாகப்பட்டினம் மாவட்டம்

இடம்: நாகப்பட்டினம்,

புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு,

நேரம்: காலை 11.00 மணி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. திரு.M.சுகுமார்

2. திரு.A.கிங்ஸ்லி ஜெரால்டு

3. திரு.SKG.A.சேகர்

4. திரு.R.சுரேஷ்குமார்

5. திரு.M.அஹ்மது தம்பி மரைக்காயர்

6. திரு.H.S.பாலமுருகன்

7. திரு.⁠G.தினேஷ்ராஜ்

44
திருவாரூர் மாவட்டம்:

இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதி, திருவாரூர்

நேரம்: மாலை 3.00 மணி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:

1. திரு.S.மதன்

2. திரு.G.ஆனந்த்

3. திரு.K.காந்தி

4. திரு.S.பிரபாகரன்

5. திரு.K.கவியரசன்

6. திரு. UVM ராஜா (எ) ராஜராஜன்

7. திரு.S சாதிக் அலி

8. திரு.K.ராஜராஜசோழன்

9. திரு.C.ரஞ்சித் (எ) மணிமாறன்

10. திரு.P.பாரத் (எ) முகுந்தன்

11. திரு.G.P.பாரதி

12. திரு.V.மணிகண்டன்.

13. திரு.N.P.ஜெஸ்வரன்

14. திரு.J.பாரதிதாசன்

15. திரு.S.சிவப்பிரகாஷ்

வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories