நெருங்கும் ஆபத்து! பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அலர்ட் கொடுக்கும் பள்ளிகல்வித் துறை!

Published : Sep 19, 2025, 11:57 AM IST

School Education Department: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

PREV
14
வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சிறிது நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தென் மேற்கு பருவமழையை விட வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகளவில் மழை பொழிவை கொடுக்கும் என்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

24
பள்​ளிக்​கல்​வித் துறை

இதற்​கிடையே சில மாவட்​டங்​களில் உள்ள பள்ளி வளாகங்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறைக்கு புகார்​கள் வந்​தன. இந்நிலையில் பள்ளி வளாகங்​களில் மழைக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

34
பள்ளிக்கல்வித் துறை

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்குரிய அம்சங்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

44
பள்ளி வளாகங்கள்

அதேபோல், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உரிய அறிவுரைகள் வழங்க எடுக்கவேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று தொடர் சிகிச்சையை வழங்க வேண்டும் உட்பட வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories