இவ்வளவு நடந்தும் வீட்டில் இருந்து வெளியே வராத விஜய்.! 10 நாளுக்கு பிறகு வீடியோ காலில் ஆறுதலா.? கொதிக்கும் கரூர் மக்கள்

Published : Oct 07, 2025, 12:09 PM IST

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 10 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். நேரடியாக வராமல் தொலைபேசியில் பேசியது கரூர் மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் உரிய இடம் வழங்கவில்லை, பாதுகாப்பு வழங்கவில்லையென இதற்கு காரணம் தவெக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. போலீஸ் தரப்போ தங்கள் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு சதவிகிதம் கூட தவெக செயல்படுத்தவில்லையெனவும், 

10ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கடிதம் கொடுத்து விட்டு 27ஆயிரம் பேர் கூடியதாக போலீஸ் தரப்பும் தெரிவித்துள்ளது. மேலும் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு தான் தவெக தலைவர் விஜய் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

24

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று இதுவரை 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று எந்த வித ஆறுதலும் தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

 விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் சென்று விட்டார். புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டு விடுவோமா என்ற அசத்தில் நீதிமன்த்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

34

எனவே தவெக மாவட்ட செயலாளர்களிடம் விஜய் நேரடியாக பேசி வருவதாகவும், யாரும் முடங்கிவிட வேண்டாம் என தெரிவித்திருந்தாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோகாலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், 

உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மக்களிடமும் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார்

44

இதனிடையே கரூர் சம்பவத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் பல ஆயிரம் குவிந்தனர். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற கூட்டத்தில் சிக்கி உயிழந்தவர்களை நேரடியாக கூட சந்திக்காமல் சம்பவம் நடைபெற்று 10 நாட்களுக்கு பிறகு தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்து இருப்பது கரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories