Thirumavalavan | அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமைந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கரூர் துயர சம்பவத்தை வைத்து பாஜக, அதிமுக அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
23
திமுக.வின் வெறுப்பை மட்டும் பேசும் விஜய்
இதற்காக நான் வருகின்ற 11ம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளேன். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினருக்க அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் முதல்வரின் செயல்பாடு பாராட்டுக்குறியது. பாஜக கொள்கை எதிரி என்று வாய்மொழியில் சொன்னாலும், எந்தக் கொள்கையை எதிர்க்கிறார் என்று விஜய் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆரம்பம் முதல் கரூர் வரை அவர் திமுகவின் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்துள்ளார்.
33
திமுக.வுக்கே வெற்றி..!
தவெக தலைவர் விஜய், பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டார் என நான் நம்புகிறேன். ஆனால், பாஜக.வினர் விஜய்யை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. சிறுபான்மையினர் வாக்கை சிதறடிக்கும் நோக்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அதிமுக, தவெக வரிசையில் தேர்தலை மனதில் வைத்து பாஜகவும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. எத்தனை பேர் களம் இறங்கினாலும், திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.