அதற்கு விமர்சனம் செய்தால் எப்படி? குறிவைத்தால் தவற மாட்டேன். இல்லாவிடிவில் குறியே வைக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர் வசனம் பேசி இருப்பார். நம்ம குறி எப்போதும் தப்பாது. இனி பிளாஸ்ட்.. பிலாஸ்ட் தான் விஜய்யை ஏன் தொட்டோம் என நினைத்து பீல் பண்ணப் போகிறார்கள்'' என்று விஜய் கடுமையாக பேசினார்.
அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா
தொடர்ந்து திமுகவை அட்டாக் செய்த விஜய், ''அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தியுள்ளனர். ஆனால் அந்த அறிவுத் திருவிழால் நம்மை தற்குறிகள், சங்கிகள் என அழைக்க வேண்டாம் என்று நமது கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாளின் உறவினர் (திமுக எம்.எகல்.ஏ எழிலன்) ஒருவர் சொல்லியுள்ளார்.
நம்ம கட்சியை சேர்ந்த ஒருவரே தவெகவுக்கு ஆதரவாக பேசியது என திமுக புலம்பி வருகிறது'' என்று கூறியுள்ளார்.