கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்

Published : Nov 23, 2025, 12:00 PM IST

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். தனது உரையில், நம்ப வைத்து ஏமாற்றியவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என ஆவேசமாக பேசினார்.

PREV
12
கரூர் சம்பவம் பற்றி தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகளை வேகப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தனது மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவத்திற்குப் பிறகு சில வார இடைவெளிக்குப் பிறகு, விஜய் மீண்டும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் தொடங்கியுள்ளார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் அரங்கில் விஜய் கலந்து கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் இன்று காலை சென்னையின் நீலாங்கரை பகுதியில் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார். அவரது வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

சுமார் காலை 11 மணிக்கு விஜய் கூட்ட அரங்கத்தை சென்றடைந்தார். விஜய் பங்கேற்ற பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டநிர்வாகத்திற்காக பங்கேற்பாளர்களுக்கு ‘QR code’ கொண்ட டிஜிட்டல் நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும். இது தவெக நிகழ்ச்சி அமைப்பில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

22
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்வில் விஜய்

விழாவில் பேச தொடங்கிய விஜய், “தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. எந்த வாழ்க்கையிலும் பிரச்சனை கிடையாது. அப்படியே ஏதாவது பிரச்சனை என்றால் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் அவர்கள் என் மீது தனிப்பட்ட வன்மம் வைத்திருக்கலாம். ஆனால் என்னை நம்ப வைத்து பொய் சொல்ல வைத்து வாக்கு செலுத்த வைத்தார்களே” என்று கரூர் சம்பவத்துக்கு பிறகு ஆவேசமாக கேள்விக்கணைகளை தொடுத்தார் விஜய்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்ப வைத்து நாடகம் ஆடியவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும். எனவே அவர்களை நாம் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என்றார். தெரிந்தோ தெரியாமலோ இந்த மாவட்டத்திற்கும் நமக்கும் ஒரு இணைப்பு ஏற்படுகிறது. எல்லாம் நன்மைகளும் சட்டபூர்வமாக செய்ய வேண்டும். எனவே தான் மக்களிடம் செல் என்ற அண்ணா சொன்ன வார்த்தையை கையில் எடுத்தோம். 

அது என்ன கிலோ விலை என பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் நமது கொள்கை என்ன என்று கேட்கிறார். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்” என்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசினார். தனது உரையில் வேறு எங்கும் கரூர் பற்றி விஜய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories