School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000! அக்டோபர் 30ம் தேதி வரை கடைசி நாள்!

Published : Sep 29, 2024, 12:28 PM IST

School Student: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கும் திட்டம். பள்ளி மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

PREV
15
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000! அக்டோபர் 30ம் தேதி வரை கடைசி நாள்!
Thirukkural

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2000ம் ஆண்டு முதல் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருக்குறள் கூறும் கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பொருட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 15,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்படும் இந்த போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
kanchipuram School Student

பரிசுத் தொகை: 

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு. கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

35
Thirukkural Competition

தகுதி: 

அதன்படி 2024 – 2025 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். 

45
school student

போட்டிக்கான நிபந்தனைகள்: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. 

55
tamil development department

போட்டியில் விண்ணப்பிக்க கடைசி நாள்:

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 30ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories