இதற்கிடையில், விஜய் தனது அடுத்த பொதுக்கூட்டத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் நடத்த முடிவு செய்தார். அதற்காக மூன்று இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்த நாளில் கார்த்திகை தீபம் நடைபெறுவதால், பொதுக்கூட்ட நாளை மாற்றுமாறு காவல்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி தவெக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார். விழாவில் பேசிய அவர், “
மக்களுடன் செல் என்ற அண்ணாவின் கொள்கைபடி அரசியலுக்கு வந்துள்ளோம். அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை.
மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? நடிப்பவர்களையும் நாடகமாடுவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
ஆரம்பிக்கும் முன்பே அலறினால் எப்படி? திமுக தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விஜய் விமர்சனம் வைத்தார். விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி? என்று ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார் தவெக தலைவர் விஜய்.