மீண்டும் முழு வேகத்தில் களமிறங்கிய விஜய்..! தவெகவில் புதிய நிர்வாகக் குழு நியமனம்! யார் யாருக்கு இடம்?

Published : Oct 28, 2025, 07:02 PM ISTUpdated : Oct 28, 2025, 07:11 PM IST

தவெகவில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர்? என்பது குறித்து பார்ப்போம். 

PREV
15
கரூர் சம்பவத்துக்கு பிறகு முடங்கிய தவெக

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு நடிகர் விஜய்ய்யின் தமிழக வெற்றிக் கழகம் முழுவதுமாக முடங்கியது. விஜய் சென்னையிலும், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தலைவர்க‌ள் மற்ற இடங்களிலும் பதுங்கியதால் தவெக செயல்பாட்டில் சுணக்கம் நிலவியது. கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்படவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்ததால் இனிமேல் தவெக பழையபடி வேகம் எடுக்கும் என அக்கட்சியினர் கூறி வந்தனர்.

25
தவெக நிர்வாகக் குழு அமைப்பு

அதன்படி தவெகவின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதாவது தனது உத்தரவின்பேரில் தவெகவின் செயல்பாடுகளை கண்காணிக்க மொத்தம் 28 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார் விஜய். இந்த குழுவில் மாநில செயலாளர்கள் மட்டுமின்றி மாவட்ட செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

35
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா

விஜய் அமைத்த தவெக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

1. N.ஆனந்த் பொதுச்செயலாளர்

2. ஆதவ் அர்ஜுனா ,தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்.

3. Dr. K.G. அருண்ராஜ், ExIRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்.

4. CTR, நிர்மல் குமார், இணைப் பொதுச்செயலாளர்.

5. A.ராஜ்மோகன், துணைப் பொதுச்செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்.

6. C.விஜயலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர், நாமக்கல் மாவட்டம்.

7.A.ராஜசேகர், தலைமை நிலையச் செயலாளர், கடலூர் மாவட்டம்.

8. M.அருள் பிரகாசம், துணைப் பொதுச்செயலாளர், சென்னை மாவட்டம்.

9. M.சிவக்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், அரியலூர் மாவட்டம்.

45
சென்னை, சேலம்

10. A.பார்த்திபன், மாவட்டக் கழகச் செயலாளர், சேலம் மத்திய மாவட்டம்.

11. R.விஜய் சரவணன், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சாவூர் மத்திய மாவட்டம்.

12. M.சிவன், மாவட்டக் கழகச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டம்.

13. M.பாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர், ஈரோடு மாநகர் மாவட்டம்.

14. V.சம்பத்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், கோவை மாநகர் மாவட்டம்.

15. திரு. M.சுகுமார், மாவட்டக் கழகச் செயலாளர், நாகப்பட்டிணம் மாவட்டம்.

16.S.1.தங்கப்பாண்டி, மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்.

17.K.அப்புனு (எ) வேல்முருகன், மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்.

18. B. ராஜ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்டம்.

19. J.பர்வேஸ், மாவட்டக் கழகச் செயலாளர், புதுக்கோட்டை மத்திய மாவட்டம்.

55
மதுரை, கோவை

20. A.விஜய் அன்பன் கல்லானை, மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்.

21. R. பரணிபாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்.

22. V.P.மதியழகன், மாவட்டக் கழகச் செயலாளர், கரூர் மேற்கு மாவட்டம்.

23. N.சதீஷ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், நாமக்கல் மேற்கு மாவட்டம்.

24. K.விக்னேஷ், மாவட்டக் கழகச் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம்.

25. M.வெங்கடேஷ், மாவட்டக் கழகச் செயலாளர், ஈரோடு கிழக்கு மாவட்டம்.

26.S.ராஜகோபால், மாவட்டக் கழகச் செயலாளர், திருநெல்வேலி தெற்கு மாவட்டம்.

27.S.பாலசுப்பிரமணியன், கழக உறுப்பினர், தூத்துக்குடி.

28. டாக்டர். N.மரிய வில்சன், கழக உறுப்பினர், சென்னை மாவட்டம்.

Read more Photos on
click me!

Recommended Stories