தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் 16.11.2025 முதல் 16.01.2026 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி. மதுரை மற்றும் புதுச்சேரி /கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு,
அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) குளிர்சாதன பேருந்து (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2025 முதல் 30.12.2025 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2025 முதல் 29.12.2025 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது)