சென்னையில் ரேபிடோ பைக் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அப்பெண் பணம் கேட்டு மிரட்டியதால் பொய் புகார் அளித்ததாக ஓட்டுநர் கூறியுள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் கணவருடன் வசித்து வரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண். பள்ளிக்கரணையில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு செல்ல நேற்று முன்தினம் இரவு 'ரேபிடோ' பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அங்கு வந்த பைக் டாக்சி ஓட்டுநர் சிவக்குமார் அப்பெண்ணை பள்ளிக்கரணை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின் சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பெண் கூறியுள்ளார்.
24
பெண் புகார்
காத்திருந்த பைக் ஓட்டுநர் அங்கிருந்து மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் போரூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தன் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதையடுத்து, அந்த நபரிடம் நைசாக பேசி மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
34
பாலியல் வன்கொடுமை
அப்போது அங்கு காத்திருந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பள்ளிக்கரணையில் இருந்து மதுரவாயலுக்கு வரும் போது அப்பெண் அந்த வாகனத்தை ஓட்ட சொல்லிக் கொடுக்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் அதன் படி சொல்லிக்கொடுத்த போது நெருக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். அதன் பின்னர் இவர் 2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். தராததால், வன்கொடுமை புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பது தொடர்பாக இருவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.