சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை இருந்தாலும் புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதால் புறநகர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் இந்த ரயில்களை மலைபோல் நம்பியுள்ளனர். இதற்கிடையே வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5 கிமீ தொலைவுக்கு ரூ.495 கோடி செலவில் பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது.
பல ஆண்டுகள் பணிகள் பாதிப்பு
இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், 4.5 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாக ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் இந்த பணிகளுக்காக
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றம் சென்றதால் பல ஆண்டுகளாக தண்டவாளம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. பின்பு நீதிமன்றத்தின் மூலம் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு எஞ்சியிருக்கும் இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தன.