பணமதிப்பு நீக்கம் போல SIR-ம் யானைக்கு டவுசர் தைக்கும் வேலை: சீமான் விமர்சனம்

Published : Nov 17, 2025, 07:41 PM IST

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டம் நடத்தினார். இந்த SIR பணியானது, ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய வாக்காளர்களைத் தேர்வு செய்யும் முயற்சி என்றும் சாட்டினார்.

PREV
15
SIR பற்றி சீமான் விமர்சனம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், SIR திருத்தப் பணிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பணமதிப்பு நீக்கம் போல SIR நடவடிக்கையும் யானைக்கு டவுசர் தைப்பது போன்ற வேலைதான் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

25
போலி வாக்காளர்களை நீக்காதது ஏன்?

சீமான் பேசுகையில், "போலி வாக்காளர்களை நீக்குவதற்காக எஸ்.ஐ.ஆர். (SIR - Special Intensive Revision) பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், போலி வாக்காளர்களுக்கு உரிமை கொடுத்தது யார்? இத்தனை காலமாகப் போலி வாக்காளர்களை நீக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், "தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு நெருங்கி வரும் சூழலில், இந்த குறுகிய காலத்திற்குள் தமிழகம் முழுவதும் எப்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

35
கள்ள ஓட்டை தடுக்காதவர்கள்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைச் சாடிய சீமான், "தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியாதா? கள்ள ஓட்டு போடுவதையும், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும் தடுக்காதவர்கள், வாக்காளர் பட்டியலை மட்டும் சரியாக எண்ணிச் சொல்லிவிடுவார்கள் என்று நாம் நம்ப வேண்டுமா?" என்று விமர்சித்தார்.

இரட்டை வாக்குகள் உள்ளவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் போன்றவற்றை மட்டும் கண்டறிந்து நீக்குவதற்குப் பதிலாக, "ஒட்டுமொத்தமாக அனைவரும் வாக்குரிமையைப் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேலை?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

45
ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள்!

வாக்குரிமையைப் புதுப்பிக்கக் கோரும் இந்தச் செயல்பாடு குறித்து சீமான் பேசுகையில், "ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் மக்களுக்கு இருக்கும் மதிப்புமிக்க உரிமை. அதை இப்படித் தான்தோன்றித்தனமாக கையாள்கிறார்கள் என்றால், மக்களை எந்த அளவிற்கு இவர்கள் மதிக்கிறார்கள் என்று பாருங்கள்" என்று கோபப்பட்டார்.

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்ய வேண்டுமெனில், ஓராண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு முறையாகச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், நீங்கள் வெளியிடப் போகும் பட்டியலில் எனது பெயர் இல்லாவிட்டால் மீண்டும் முறையீடு செய்து எனது வாக்கை பெறுவதற்கு அவகாசம் இருக்கிறதா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

55
ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பார்கள்

“இந்த நாட்டில் இதுவரை வாக்குரிமை பெற்ற வாக்காளர் பெருமக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களைத் தேர்வு செய்தார்கள். ஆனால் இப்பொழுது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்வதுதான் இந்த எஸ்.ஐ.ஆர். பணி. தனக்கு யார் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளால் குறைந்தது ஒரு கோடி பேர் தங்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்று சீமான் அச்சம் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories