காய்கறி விலை மீண்டும் உயர்ந்ததா.? கோயம்பேட்டில் தக்காளி , இஞ்சி ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?

Published : Aug 31, 2023, 07:45 AM IST

கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலை வரத்தை பொறுத்து விலை ஏறி இறங்கி வருகிறது. நேற்று சற்று குறைந்த காய்கறி விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.   

PREV
14
காய்கறி விலை மீண்டும் உயர்ந்ததா.? கோயம்பேட்டில் தக்காளி , இஞ்சி ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?

காய்கறி விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் ஆந்திரா, கர்நாடக மற்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்று வருகிறது. அந்த வகையில்,  கோயம்பேடு மொத்த சந்தையில் இன்றைய காய்கறி விலையானது வரத்தை பொறுத்து ஏறி இறங்கி வருகிறது.  ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை சற்று அதிகரித்து 26 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் அறுவது ரூபாய்க்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

24

உருளை கிழங்கு விலை என்ன.?

உருளைக்கிழங்கை பொறுத்த வரை ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய், சுரைக்காய் 20 ரூபாய்க்கும்,  பட்டர் பீன்ஸ் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முட்டைகோஸ் ஒரு கிலோ 12 ரூபாய், கேரட் ஒரு கிலோ 50 ரூபாயும் காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாயும், கொத்தவரங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது,

34

தக்காளி விலை என்ன.?

முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல ஒரு கிலோ பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெண்டைக்காயை பொருத்தவரை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை உச்சத்தில் இருந்தது தற்போது படிப்படியாக குறைந்து தக்காளி விலை ஒரு கிலோ 32 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

44

 உச்சத்தில் இஞ்சி விலை

இஞ்சியும் விலையில் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ இஞ்சி 50 முதல் 60 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இஞ்சியானது 200 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

புதுவையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது - முதல்வர் பெருமிதம்

Read more Photos on
click me!

Recommended Stories